Skip to content
Menu

கல்லறைகள்‌ கதைகள்‌ பேசினால்‌, தம்முள்‌ மண்ணோடு மண்ணாகி மறைந்து கிடப்பவர்களின்‌ வாழ்க்கைச்‌ சரித்திரங்களை எடுத்துரைக்கும்‌. அவர்களின்‌ எலும்புகள்‌ அழியாமல்‌, அவர்கள்‌ வாழ்ந்து பறைசாற்றிய இறையாட்சி மதிப்பு நலன்களுக்கு சான்று பகரும்‌. அன்னை ஞானம்மாவின்‌ கல்லறை அவரது நினைவிடம்‌ மட்டுமல்ல, காண வரும்‌ நல்மனாங்களை ஆசீரால்‌ நிரப்பி உள்ளத்தின்‌ எண்ணங்களைச்‌ சீர்தூக்கிப்‌ பார்க்கச்‌ செய்யும்‌ புணித பூமியாக உள்ளது.

இயேசுவோ மரணத்தை மண்ணில்‌ விழுந்து, மடிந்து புத்துயிர்‌ வழங்கும்‌ கோதுமை மணிக்கு ஒப்பிடுகிறார்‌ யோவா 12:24). இயேசுவின்‌ இறைவார்த்தைகளை நம்பி உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்த அன்னை ஞானம்மா, அஞ்சாது பகிரங்கமாக இயேசுவின்‌ மதிப்பீடுகளின்படி வாழந்தார்‌. தான்‌ வாழந்த சமூகத்தில்‌ மறைக்கல்வியைப்‌ போதித்தார்‌. பெண்களுக்கான கல்வியை எதிர்த்தவர்களுக்கு அஞ்சாமல்‌ தனது எண்ணங்களை அன்புடன்‌ பதிவு செய்தார்‌. தனக்கு வந்த எதிர்ப்பு, எச்சரிக்கை, பயமுறுத்தல்கள்‌ பற்றிக்கவலைப்படவில்லை. இயேசுவின்‌ இறையாட்சிப்‌ பணி இது என்பதால்‌, எந்த எதிர்ப்பையும்‌ எதிர்கொள்ளத்தயாராக இருந்தார்‌.

நடந்து நடந்து பெண்களுக்கு மறைக்கல்வி, பொதுக்கல்வியைப்‌ போதீத்த அன்னை ஞானம்மாவின்‌ கால்களும்‌, ஆதரவற்ற பெண்களை, பெண்‌ குழந்தைகளை அரவணைத்த கரங்களும்‌, பெண்களில்‌ இறை மனித மாண்பு மதிக்கப்படாதபோது கொதித்த இரத்தமும்‌ தங்களின்‌ ஆட்டத்தை சற்று முடித்துக்கொள்ள ஆறடி அகல நீலத்தில்‌ அடக்கப்பட்டார்‌ அன்னை. அன்னையின்‌ கல்லறை இன்றும்‌ அவரது நல்லன்பை, இறையருளைச்‌ சுரக்கும்‌ இடமாகத்‌ திகழ்வதைக்‌ கல்லறை சந்தித்த யாவரும்‌, இதயத்துக்குள்‌, உணர்கின்றனர்‌. அன்னையின்‌ கல்லறையில்‌ செபித்ததால்‌ நிகழ்ந்துள்ள புதுமைகளுக்கு உயிருடன்‌ உள்ள சாட்சிகள்‌ பல உண்டு. அன்னை ஞானம்மாவின்‌ கல்லறை கீழச்சேரி கிராமத்தில்‌ நீகரற்ற இறையருள்‌ சுரக்கும்‌ நினைவுச்‌ சின்னமாய்‌ உள்ளது. வேதப்போதக குருக்களுக்கும்‌ மக்களுக்குபிடையே பாலமாக இருந்து, மக்களின்‌ தாய்‌ மொழியில்‌ விசுவாசத்திற்கு விளக்கமும்‌, நற்செய்தி அறிவிப்பும்‌ செய்து விசுவாசம்‌ காத்து வளர்த்தவர்களும்‌ இந்த கோவில்‌ பிள்ளைகள்‌ தான்‌.

உயிரற்ற நிலையில்‌ அன்னையின்‌ உடல்‌ அடக்கம்‌ செய்யப்பட்டாலும்‌ அவறது கொள்கைகளை, இலட்சியங்களை, இறையாட்சிக்‌ கனவுகளை கல்லறைக்குள்‌ அடக்கப்பட முடியவில்லை. அன்னையின்‌ உடல்‌ அடக்கம்‌ செய்யப்பட்டது. ஆனால்‌, அன்னை அடங்கிவிடவில்லை, இலட்சியவாதிகள்‌ மரணத்தில்‌ புதைக்ககப்படுவதில்லை மாறாக விதைக்கப்படுகின்றார்கள்‌ என்பது இயேசுவில்‌ உண்மையானதுபோல்‌, எமது அன்னையிலும்‌ உண்மையாகியுள்ளது என்பது இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மாவின்‌ கல்லறை சொல்லும்‌ பாடம்‌. இங்கே ஸண்களின்‌ மாண்பு, மாணுட மதிப்பு வாழ்கிறது.

இறை ஊழியர்‌ கல்லஜையின சிறப்பம்சங்கள்‌

  • ஊர்‌ துவக்கத்தில்‌ அன்னையின்‌ கல்லறை உள்ளது. ஊருக்குள்‌ நுழையும்‌ போதும்‌, வெளியேறும்‌ போதும்‌ செபிக்கும்‌ மக்களுக்கு இறைப்‌ பாதுகாப்பை உறுதி சசய்கிறார்‌ இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மா.
  • பள்ளிக்‌ குழந்தைகள்‌ கல்லறையில்‌ தினமும்‌ செபிப்பதைப்‌ பார்க்கும்‌ அனுபவம்‌ மக்களையும்‌ செபிக்கத்‌ தூண்டுகிறது.
  • பள்ளிக்‌ குழந்தைகள்‌ இறை ஊழியரின்‌ கல்லறை முழுவதும்‌ தேர்வு எண்களை எழுதி, அவரது பரிந்துரைக்காக நம்பிக்கையுடன்‌ செபிக்கின்றனர்‌.
  • ஐந்து ஆண்‌ குழந்தைகளைப்‌ ஹற்று வளர்த்து இறைவனுக்கு அர்பணித்த இறை ஊழியர்‌ நமது தேவையைப்‌ புரிந்துகொள்வார்‌ என்று குழந்தையில்லாத தம்பதீயர்‌ அன்னையிடம்‌ கல்லறையில்‌ நின்று செபிப்பதும்‌, பலணடைந்துள்ளதும்‌ அன்றாடம்‌ நாம்‌ காணும்‌, கேட்கும்‌ சாட்சியங்கள்‌.
  • இறை ஊழியரின்‌ கல்லறை கீழச்சேரி கிராமத்தின்‌ எல்லைக்காவல்‌ தெய்வக்‌ கோயில்‌ என்கின்றனர்‌. மக்கள்‌ கடவுளின்‌ பாதுகாப்பை உணர்வதாகக்‌ கூறுகின்றனர்‌.
  • கல்லறையில்‌ செபித்த பலரின்‌ நோய்கள்‌ குடும்பப்‌ பிரச்சனைகள்‌ தீர்ந்ததாகச்‌ சாட்சியமளிக்கின்றனர்‌.

இலட்சியவாதிகள்‌, இறை ஊழியர்களை மரணமானது சந்திக்கப்‌ பயப்படும்‌. இதைப்போன்றே இறை ஊழியர்‌ அம்மா ஞானம்மாவும்‌ இறந்தும்‌ எம்மிடையே இன்றளவும்‌ புகமுடன்‌ வாழ்கின்றார்‌.

QUICK LINKS

Home

About

Blog

Contact

CANONISATION

Process

Prayer

Testimonies

ardlogopng

© Archdiocese of Madras Mylapore. All rights reserved worldwide.