திருப்பலி, திவ்விய நற்கருணையை உட்கொள்ளும் சமபந்தி. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது வைத்த அளவுகடந்த அன்பின் காரணமாக தமது உடலைச் சிதைத்துக் கொள்ளவும், கடைசி சொட்டு இரத்தத்தைக்கூட நமக்காகச் சிந்தவும் தம்மையே பலியாக கல்வாரியில் ஒப்புக்கொடுத்தார். அப்பமும், இரசமும் கிறிஸ்தவ மதிப்பீடுகளான துன்பம், குருதி, வியர்வை, கண்ணீர். கடும் உழைப்பு வாழ்க்கைப் போராட்டத்தில் நசுக்கப்பட்ட மணனிதத்தன்மையை எடுத்துரைப்பதாக அன்னை உணர்ந்தார். எளிய, பாதிக்கப்பட்ட ஸபண்களுக்கு பொறுப்புடன் பணி செய்ய, தான எழுச்சி பெற்றே ஆகவேண்டும் என்ற அறைகூவலை தன்னுள் நற்கருணை ஏற்படுத்தியதை அன்னை உண்ரந்தார்.
தனது 37 வயதில் கணவனை இழந்து, நம்பிச்செல்ல நண்பர்களின்றி, அண்டிச்செல்ல உறவின்றி தனது ஐந்து மகன்களுடன் தீக்கற்ற நிலையில் இருந்த அன்னை ஞானம்மாவிடம், இளம் பெண்ணுக்குரிய தணிமையோ, எதிர்காலம் குறித்த பயமோ, அடுத்து என்ன சய்யப் போகிறோம் என்ற குழப்பமோ இன்றி இறை நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல உதவியது, அவர்களின் நற்கருணை சந்தீப்பும், நற்கருணையுடனான நெருங்கிய உறவுமே ஆகும். நற்கருணை அன்னையின் உள்ளத்தில் விடுதலைக்கான எழுச்சிகளை ஏற்படுத்தியது, பெண்களின் வாழ்வினை முழு மனிதத்தன்மை நிறைந்ததாக மாற்ற வழிகாட்டும் விளக்காகி நின்றது. இந்த நற்கருணைதான் அன்னையை கடைசி மூச்சு உள்ள வரையில் முழுமையான அர்ப்பண நிலையுடன் நிலைத்தீருக்க உதவியது.
பிரங்கிபுரத்தில் அன்னையின் பக்கத்து வீட்டில் வசிக்கும் செளரெட்டி என்பவர், என்று கூறுகிறார். நற்கருணைத் தீயானமே அன்னைக்கு அவர் வாழந்த ஊரில் பெண்களுக்கு எதிராகக் காணப்பட்ட அநீதி நிரம்பிய விதிமுறைகளை அழிக்கும் சக்தியாகத் திகழ அழைத்தது. இயேசு கிறிஸ்து ஒடுக்கப்பட்ட ஏழை வண் குழந்தைகளில் வாழ்கிறார் என்பது தான் நற்கருணை வழங்கும் பேருண்மை என்பதைக் கண்டறிந்தார். தேவ நற்கருணையைப் பகிர்ந்து தீயாணிக்கும் தன்னால், மனித மாண்பே இல்லாமல் மனுக்குலத்தின் மறுபாதியான பெண்கள் நடத்தப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை என்கீறார் அன்னை.
அன்னை ஞானம்மாவின் இல்லத்தில்தான் முதன் முதலில் தீரு இருதய ஆண்டவர் படம் ஸ்தாபகம் செய்யப்பட்டிருந்தது. அதுபோல, பலகையிலான ஒரு சிறிய பீடமும் இருந்தது. தனது மகன் குருக்களும், அப்பகுதி வேத போதக மறைப்பணி குருக்களும் இல்லத்திற்கு வரும்போதும், இப்பீடத்தில், திருப்பலி நிறைவேற்றியுள்ளனர். திருப்பலிக்குப் பயன்படுத்திய பூசை உடைகள் 1990 வரை அவரது இல்லத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதை, அன்னையின் இல்லத்திற்குப் புணிதப் பயணம் செய்த நம் குணதலா இல்லச் சகோதரிகள் அப்போமழுதே பார்த்துள்ளனர்.
ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே: (திபா 16:5) என்று பாடிச் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அன்னை, தனது ஐந்து மகன்களையும் கடவுளின் பணிக்கென அர்ப்பணித்தார். எறையூரில் தனது உறவுகளுடன் வாழ்ந்து வந்த அன்னையால் தினமும் திருப்பலியில் நற்கருணை நாதரை உட்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அன்றாட திருப்பலிக்காகத் தனக்கு அறிமுகம் இல்லாத கீழச்சேரி கிராமத்தில் குடியேறினார். நற்கருணையில் இயேசு காட்டிய பாதையைப் பின்பற்றி தமது வாழ்வை பெண் கல்விக்காக அர்ப்பணிக்க முனவந்தார்.
சமூகத்தில் மனித மாண்பற்றவர்களாகக் கருதப்பட்ட பெண்களின் நல்வாழவுக்காக, தமது சொத்துக்களையெல்லாம் விற்று. மப்பேடு பகுதியில் பல ஏக்கர் நிலத்தை வாங்கினார். விடுதி பெண் குழந்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை வராமல் இருக்கவே இந்த விளைநிலம் வாங்கப்பட்டது. நற்கருணைதான் அன்னையை, ஏழை எளிய எபண்களை ஆதரிக்கவும், நேசம் காட்டி கல்வி அளிக்கவும் தூண்டியது எனலாம்.