Skip to content
Menu

சபைக்கு ஆண்வேர்கள்‌!

1864 ஆம்‌ ஆண்டு, 28 வயது நீரம்பிய கைம்பண்ணான ஆகத்தம்மா துவக்கக்‌ கல்வி கற்க விருப்பம்‌ கொண்டு உட்பிள்ளையாக விடுதியில்‌ இணைந்து பள்ளியில்‌ பயின்றார்‌, அன்னையின்‌ பணிகளில்‌ உடனிருந்தார்‌.

1866 ஆம்‌ ஆண்டு… தன்‌ 15 ஆம்‌ அகவையில்‌ உட்‌ பிள்ளையாக விடுதியில்‌ நுழைந்து கல்வி கற்றார்‌ இளம்பெண்‌ அருளம்மா!

  • அன்னையின்‌ கடின உழைப்பு
  • தன்னிகரில்லா சேவை
  • தியாகம்‌
  • பக்தி

இவற்றைக்‌ கண்ணுற்ற இவ்விருவரும்‌ தங்கள்‌ வாழ்வின்‌ மாதீரிகையாக அன்னை ஞானம்மாவைக்‌ கண்டார்கள்‌. அன்னையால்‌ பெரிதும்‌ ஈர்க்கப்பட்ட இவர்கள்‌ இறைபணிக்கென தங்களை அர்ப்பணிக்க முடிவு சசய்தார்கள்‌. துறவுநிலை ஏற்று அன்னை ஞானம்மாவின்‌ பணியினை தொடர்ந்து ஆற்ற எண்ணிய இவ்விருவரும்‌ 1871-ல்‌ அன்னையிடம்‌ தங்களின்‌ விருப்பத்தை தெரிவித்தார்கள.

ஒரு அசத்தலான ப்றப்பு

மறைக்கல்வியும்‌ ஏட்டுக்கல்வியும்‌ மாறாத மானிடத்‌ தேவைகள்‌ என்பது அன்னையின்‌ கணிப்பு… எனவே தனது பணி தனது வாழ்நாட்களுக்குப்‌ பின்னும்‌ சமுதாயத்தில்‌ தொடரப்பட வேண்டும்‌ என்பதை திட்டவட்டமாக உணர்ந்தார்‌ அன்னை! இந்தத்‌ தருணத்தில்‌ அருளம்மாவும்‌… ஆகத்தம்மாவும்‌ காட்டிய வழி சரியாகப்பட்டது அன்னை ஞானம்மாவிற்கு! இவ்விரு இளம்‌ பெண்களின்‌ கோரிக்கையை நிறைவேற்றுவதை இறைத்திருவுளமாகக்‌ கண்டார்‌ இவர்‌! இப்படித்தான்‌ ஜனனம்‌ எடுத்தது புனித அன்னாள்‌ சபை!

சபைொன்று தொடங்கியப்‌ பின்‌ பணியினை அகழ்ந்தடுக்கவில்லை அன்னை ஞானம்மா. பணியினை முதலில்‌ தெரிந்து கொண்டார்‌ பணி பலப்பட… பணி நிரந்தரமாய்‌ தொடரப்பட அர்ப்பணிக்கப்பட்ட அப்போஸ்தல குழு அவசியம்‌ என உந்துதல்‌ பெற்றதால்‌ சபையை நிறுவினார்‌! இதுவே புனித அன்னாள்‌ சபையின்‌ வரலாற்றுத்‌ தணித்தன்மை ஆகிறது. சமுதாயத்திற்கு நெருக்கமாக செல்ல ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகவே தான்‌ உருவாக்கிய சபையைக்‌ கண்டார்‌ அன்னை!

விசாலமான பார்வையும்‌, வீரியமான சீந்தனையும்‌

சபையொன்று மலற்ந்தால்‌ அதன்‌ வளர்ச்சிக்கு நீதி வேண்டுமே! எப்போதும்‌ கொடையினை சார்ந்து சகோதரிகள்‌ வாழ முடியாதே!

நிலையான நீதியினை எழவிருக்கும்‌ சபைக்கு ஏற்படுத்தித்‌ தரவேண்டும்‌ என்பதை தன்‌ தொலைநோக்குப்‌ பார்வையில்‌ தீர்க்கமாக உணர்ந்தார்‌ அன்னை! எனவே குண்டூர்‌, கடப்பா, கர்நூல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ உள்ள:

  • பிரங்கிபுரம்‌
  • பட்டிபண்ட்லா
  • ரெண்ட்டசிந்தாலா
  • முட்லூர்‌
  • ராவிபாடு
  • ஒண்டைட்டுபள்ளி
  • நாகராஜிபள்ளி
  • கொட்டாலா

போன்ற கிறிஸ்தவ கிராமங்களில்‌ பயணம்‌ செய்து பணமாகவும்‌ பொருளாகவும்‌ நீதி திரட்டினார்‌. பெற்ற நிதியினைக்‌ கொண்டு கீழச்சேரிக்கு அருகே மப்பேடு ஏரிக்கரையோரம்‌ 14 ஏக்கர்‌ விளைநிலத்தை தான்‌ கனவு காணும்‌ சபைக்காக ஆர்வத்துடன்‌ வாங்கினார்‌ அன்னை!

இந்த நிலம்‌ இன்றும்‌ சொடக்கக்காலத்தில்‌ இருந்து ஏன்‌ அண்மைக்காலம்‌ வரை கீழச்சேரி இல்லத்திற்கு நல்ல விளைச்சலைத்‌ தந்து கொண்டு இருந்தது.

QUICK LINKS

Home

About

Blog

Contact

CANONISATION

Process

Prayer

Testimonies

ardlogopng

© Archdiocese of Madras Mylapore. All rights reserved worldwide.