Skip to content
Menu

அருளம்மா, ஆகத்தம்மா இவ்விருவருக்கும்‌ யார்‌ பயிற்சி அளிப்பது, எங்கே, எப்படி என்ற வினாக்கள்‌ பூதாகரமாக அன்னையின்‌ மனதில்‌ எழுந்தன. ஆலோசனை வழங்கும்‌ அருட்தந்தை ஆரோக்கியநாதரும்‌ அந்த வருடம்‌ பெல்லாரியில்‌ உள்ள லாசரஸ்‌ ஆலயத்திற்கு மாற்றம்‌ பெற்று சென்று விட்டார்‌ என்றாலும்‌ அன்னை மனம்‌ தளரவில்லை.

பெல்லாரிக்குச்‌ சென்று தந்தையின்‌ அறிவுரை மவெற்றார்‌. அவரின்‌ அறிவுரைப்படி தன்னோடு வைத்து முதல்‌ கட்ட பயிற்சிகளை கொடுத்த பிறகு 07.08.1873 அன்று இவ்விருவரையும்‌ நல்லாயன்‌ சபை கன்னியரிடம்‌ பயிற்சி பபற அனுப்பி வைத்தார்‌. சென்னை பேராயர்‌ ஸ்டீபன்‌ பென்னலியும்‌ இதற்கு ஒப்புதல்‌ அளித்திருந்தார்‌.

அருளம்மா… ஆஞ்சலா எனவும்‌, ஆகத்தம்மா… பிலோமினா எனவும்‌ வயர்‌ மாற்றம்‌ வற்று துறவற சீருடை அணிந்து 04.02.1873 அன்று நுழைவு நிலைப்‌ (Novitiate) பயிற்சியினை துவங்கினர்‌.

நுழைவு நீலையிலுள்ள இவ்விருவரையும்‌ பார்த்துவர பெல்லாரிக்குச்‌ சென்றார்‌ அன்னை ஞானம்மா. இறைவன்‌ தந்த முதற்கனிகளைத்‌ துறவற உடையில்‌ கண்டு களிப்பேருவகை கொண்டார்‌ அன்னை. இவ்விருவரும்‌ 04.10.1874 அன்று புனித பிரான்சிஸ்‌ அசிசியாரின்‌ திருவிழாவன்று தங்களின்‌ முதல்‌ அர்ப்பணம்‌ ஏற்றனர்‌. இதுவே புனித அன்னாள்‌ சபை உருவான நன்னாள்‌ ஆகும்‌.

அர்ப்பணம்‌ ஏற்றபின்‌ தங்களின்‌ பணித்தலம்‌ திரும்பிய இவர்கள்‌ 18.10.1874 அன்று கீழச்சேரி மண்ணில்‌ காலடி பதித்தனர்‌. பேராயர்‌ ஸ்டீபன்‌ பென்னலி ஆண்டகையால்‌ அன்னை ஆஞ்சலா புதிய சபையின்‌ முதல்‌ குழுமத்‌ தலைவியாக நியமிக்கப்பட்டார்‌.

அன்னை ஞானம்மாவின்‌ வழ்நடத்துதலில்‌

புதிய சபை பிறந்ததில்‌ அன்னை ஞானம்மாவிற்கு எத்துணை மகிழச்சி… ஞானம்மா விதைத்த நல்வித்து முளைத்துச்‌ சில ஆண்டுகளாக ‘புணித கீளாரம்மாள்‌ சபை’ என்னும்‌ ஸெயரைத்‌ தாங்கி நின்றது. பெல்லாரியில்‌ நல்லாயன்‌ சபையில்‌ இந்த சகோதரிகளுக்கென்று இருந்த பயிற்சி நிலை இல்லம்‌ புனித அன்னாள்‌ பெயர்‌ கொண்டதாகும்‌.

சபையின்‌ முதல்‌ இரு சகோதரிகளை உருவாக்கி அளித்த இவ்வில்லத்தின்‌ நினைவாகவும்‌, நன்றியாகவும்‌ அன்னை ஜோசப்‌ அவர்களால்‌ ‘புனித அன்னாள்‌ சபை’ என பெயர்‌ மாற்றப்பட்டது. சில காலங்கள்‌ பெல்லாரி புனித அன்னாள்‌ சபை சகோதரிகளின்‌ ஒழுங்குமுறைகளே இச்சபையின்‌ ஒழமுங்குகளாக இருந்தன.

அன்னை ஞானம்மா நீறுவுநரறாய்‌…

ஆஞ்சலா, பிலோமினா என்ற கனணிகளோடு இருந்த சபையின்‌ பால பருவம்‌ எடுத்துக்காட்டான காலக்‌ கட்டம்‌. அதிக சட்டங்கள்‌ இல்லை… அன்பு சட்டம்‌ ஒன்றைத்‌ தவிர மூவருக்கும்‌ எசய்யத்‌ தெரிந்ததெல்லாம்‌… சேவை மட்டுமே! தேர்ந்த கல்விமான்கள்‌ அல்ல மூவரும்‌… ஆனால்‌ தெளிந்த ஞானம்‌ நிறைந்திருந்தது இவர்களில்‌. அன்பு ஆளுகை சய்ய அனுமதிீக்கப்பட்டதால்‌ அதிகாரம்‌ என்ற பேச்சுக்கே அவசியமற்றுப்‌ போய்‌ மகிழ்ச்சியான குடும்பமாய்‌ சபை இயங்கியது!

பயணம்‌ முடிந்தது மண்ணில்‌

அதிக உழைப்பு, கடுமையான ஆஸ்துமா, நீண்ட பயணங்கள்‌, தவ முயற்சிகள்‌… எல்லாம்‌ சேர்ந்து அன்னை ஞானம்மாவிற்கு அந்திம காலத்தை 55 – வது வயதிலேயே கொண்டுவந்தன. 1874 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 21 ஆம்‌ நாள்‌… அருட்தந்தை இரத்தினநாதர்‌ கரங்களில்‌ அருட்சாதனம்‌ பெற்றபின்‌ மண்ணக வாழ்வினை முடித்தார்‌ அன்னை ஞானம்மா! தான்‌ ஈன்ற சபைக்கு… சாகும்‌ தருவாயில்‌ அன்னை சொன்ன மின்சார வார்த்தைகள்‌ இதோ!

“என்‌ அன்பு எல்லாங்ககள!
உங்களுக்குப்‌ வபாறுப்பாய்‌ உள்ளவர்களுக்கு பணியுங்கள்‌
ஆன்மீக வழிகாட்டிகளுக்கு எசவிமடூங்கள்‌ களம்‌ ஸண்களுக்கு மறைக்கல்வி, பிறகல்வியுடன்‌
அடைக்கலமும்‌, பாதுகாப்பும்‌ தாருங்கள்‌
கறையன்‌&பா௫ கலந்த பிறரன்புடன்‌
பிறர்‌ 6சலைக்‌ககன லாற கற்றுக்‌கொள்ளுங்கள்‌
மறைக்கல்வியும்‌, ஸாதுக்கல்லியும்‌ புகட்டூங்கள்‌
பண உதவிக்கு அஇரசைகயோ, பிறறைகயோ நம்பியிராமல்‌
கடின உழைப்பை 6ற்காண்டு உங்களைக்‌ காத்துக்‌கொள்ளுங்கள்‌.”

QUICK LINKS

Home

About

Blog

Contact

CANONISATION

Process

Prayer

Testimonies

ardlogopng

© Archdiocese of Madras Mylapore. All rights reserved worldwide.