Skip to content
Menu

நற்‌செய்தியின்படி வாழும்‌, வாழ அழைக்கும்‌ நற்செய்தி அறிவிப்புபணியாளர்களின்‌ பரவலான தேடல்களில்‌ சமூக ஆன்மீகம்‌ என்பது மிக முக்கியமான ஒன்று. விவிலியத்தை மூலக்கருவியாகக்‌ கொண்டு, நீதிக்கான போறாட்டங்களில்‌ முனைந்து பாடுபட்டு, செயல்பட்டு வருகின்றவர்களின்‌ அனுபவத்திலிருந்தும்‌, தேடலிலிருந்தும்‌ தோன்றுவது புதிய ஆன்மீகமான விடுதலை ஆன்மிகம்‌ என்றால்‌, தாய்‌ திருச்சபை அன்னை ஞானம்மாவை இறை ஊழியர்‌ (Servant of God) என்ற புணிதர்‌ பட்டத்தின்‌ முதல்‌ நிலைக்கு உயர்த்தியுள்ளது. மணிதரின்‌ மறு பாதியாக உள்ள ஏபெண்ணினத்தீன்‌ மதிப்பை அல்லது மாண்பை மீட்டெடுத்து, ஆணினத்திற்கு சமமாக்கி, மனிதனை ஆணும்‌, பெண்ணுமாகப்‌ படைத்த கடவுளுக்கு மகிமை சேர்க்க முனைந்த அவரது சமூக நீதிக்கான, சமூக ஆன்மீகத்திற்காக என்றால்‌ அது மிகையாகாது. இறை ஊழியர்‌ ஞானம்மாவின்‌ சமூக ஆன்மீகத்தை பெண்களுக்கெதிரான அநீதி நிலவும்‌ மண்ணில்‌ விடுதலைக்காக நிகழ்த்தும்‌ துணிச்சலான ஆன்மீக ஆற்றல்‌ எனலாம்‌.

‘விடுதலை ஆன்மீகம்‌ அல்லது சமூக ஆன்மீகம்‌’ என்பதை உலகின்‌ எதார்த்தங்களைக்‌ கூர்ந்து ஊடூருவி நோக்கி, தெளிவான சிந்தனையுடன்‌ முன்னேறிச்‌ செல்ல உதவும்‌ ஆன்மீகம்‌ என்று அழைக்கலாம்‌. அன்னை ஞானம்மா தான்‌ வாழ்ந்த 19 ஆம்‌ நூற்றாண்டு சமூகத்தில்‌ கண்ட ஏற்றத்தாழ்வுகள்‌, வேறுபாடுகள்‌, அநீதிகள்‌, வறுமை, பெண்ணடிமை அல்லது பெண்களை ஆண்களுக்கு இணையாக மதித்து போற்றாத போக்கு போன்றவைகளைக்‌ கூர்ந்து நோக்கினார்‌. பெண்களின்‌ தாழ்நிலையை அடிமைத்தனத்திற்குரிய காரணங்களை அறிந்து, தீர்க்கமான சிந்தனையுடன்‌ பெண்ணினத்தை விடுவிக்கும்‌ சவாலை நிறைவேற்றாத ஆன்மீகம்‌ உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியாது என்ற தூய ஆவியாரின்‌ தூண்டுதல்தான்‌ இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மாவை பெண்‌ கல்வி பெண்‌ விடுதலைக்கான முதல்‌ படி எனக்‌ காணச்‌ செய்தது.

அன்னை ஞானம்மா இறையியல்‌ கற்றுத்‌ தேர்ந்த மேதையில்லையானாலும்‌, உண்மையான கிறிஸ்தவப்‌ பற்றுறுதி எது என்பதீல்‌ சதுளிவான சிந்தனை உடையவாராக இருந்தார்‌. அன்னை ஞானம்மாவின்‌ இறை நம்பிக்கையும்‌, இறை வார்த்தை வாசிப்பும்‌ அவருக்குள்‌ புதுமாதிரியான எண்ண ஓட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும்‌. அதனால்தான்‌ விவிலிய போதனைகளும்‌, கிறிஸ்தவப்‌ படிப்பினைகளும்‌ தனி மனிதக்‌ கண்ணோட்டத்திற்குச்‌ சாதகமானவை என்றோ, தனிமனிதனின்‌ உள்ளார்ந்த ஆன்மீகத்தோடு மட்டுமே தொடர்புடையவை என்றோ, சமுதாயத்தில்‌ பெண்களின்‌ எதார்த்த நிலைகளைப்‌ புறக்கணித்துவிட்டுத்‌ தேடும்‌ வெறும்‌ இறைத்தேடல்‌ என்றோ கருதவில்லை. அதற்கு மாறாக இறைவார்த்தையும்‌, கிறிஸ்தவ வாழ்வும்‌ உலகத்தை மாற்றியமைக்கக்‌ கூடிய அர்ப்பண உணர்வையும்‌, செயல்திறனையும்‌ வழங்கும்‌, வழங்க அழைக்கும்‌ ஆன்மீகம்‌ என்ற சரியான கண்ணோட்டம்‌ கொண்டவறாகத்‌ திகழ்ந்தார்‌.

அன்னை அவர்கள்‌ பெண்களின்‌ மேம்பாட்டிற்காக தாம்‌ மேற்கொண்ட பணியை தனது முக்கியப்‌ பணியாக கருதினார்‌. பெண்களின்‌ கல்விக்காக தனது சொந்த வாழ்வின்‌ பிற முன்னுரிமைகளை விட்டுக்கொடுத்தார்‌. இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மா வாழ்க்கையின்‌ அனைத்து அம்சங்களிலும்‌ கிறிஸ்துவின்‌ ஒளி ஊடுருவி இருந்தது. அவர்‌ வாழ்ந்த சமூகத்தில்‌ முற்றிலும்‌ இருண்டு காணப்பட்ட பெண்‌ சமூகத்தின்‌ மீது தன்னுள்‌ இருந்த கிறிஸ்துவின்‌ ஒளியைப்‌ பாய்ச்சினார்‌. அன்னை விவிலியம்‌ வாசித்த போதும்‌, ஆன்ம குருவின்‌ வழிகாட்டுதலால்‌, விவிலியத்தின்‌ கடவுள்‌ நலிவடைத்தோர்‌, ஒடுக்கப்பட்டோரின்‌ நலனை தேடும்‌ நீதியுள்ள கடவுளாகக்‌ கண்டார்‌. (சஎசா1௦:1- 2. ஆமோஸ்‌ 8:4-6, லேவி 25:10-17, மத்‌ 15: 6, லூக்‌ 4: 1, யாக்‌ 2:1-9).

ஏழைகள்‌, பட்டினிகிடப்பவர்கள்‌, சிறையில்‌ வாடுபவர்கள்‌, நிர்வாணிகளாக்கப்பட்டவர்களுடன்‌ கூட்டு ஒருமைப்பாடு கொண்டிருப்பவர்கள்‌… இவர்களோடு கிறிஸ்துவை உள்ளார்ந்த அனுபவமாக்கிக்‌ கொண்டவர்கள்‌. புனிதர்களில்‌ காணப்படும்‌ இந்த இறை உணர்வுகள்‌ அனைத்தும்‌ இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மாவிடம்‌ காணப்பட்டன என்பதை அவர்‌ வாழ்ந்த ஊரின்‌ மக்கள்‌ வழிவழி அனுபவமாகப்‌ பகிர்ந்து வருகின்றனர்‌.

இந்தியாவை முடக்கி வைத்திருக்கும்‌ தீய சக்திகள்‌ பலவகையானவை, வித்தியாசமானவை. துயர நிலை, அடக்கு முறை, பொருளாதாரம்‌ – சமுதாயம்‌ – அரசியல்‌ ஆகியவற்றின்‌ அநீதியான அமைப்பு முறைகள்‌, மதங்கள்‌ சுமத்தும்‌ சுமைகள்‌, மணிதரை முடமாக்கும்‌ மரபுகள்‌, விதி பற்றிய நம்பிக்கைகள்‌ போன்றவை இந்திய மக்களை அடிமைப்படுத்தும்‌ பலவகைத்‌ தளைகள்‌ என்றாலும்‌. பெண்ணடிமை என்பது கடந்த காலத்தில்‌ மிகவும்‌ பிற்போக்குத்‌ தன்மை உடையதாகவும்‌, ஏன்‌ இன்றும்‌ பெண்ணடிமையின்‌ பல வடிவங்கள்‌ காணப்படுவதையும்‌ மறுக்கமுடியுமா?

இதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஞானக்‌ கண்கொண்டு தொலை நோக்குடன்‌ பார்த்தவர்‌ அன்னை ஞானம்மா. விளைவு – ஆயிரம்‌ ஆயிரம்‌ பெண்‌ குழந்தைகள்‌ ஆரம்பக்‌ கல்வி முதல்‌ ஆராய்ச்சிப்‌ படிப்பு வரை கல்வி அறிவு பெற்று சமூகத்தீல்‌ பொருளாதாராம்‌, சமூகம்‌, அரசியல்‌ என்று ஆணுக்கு நீகராக ஏன்‌ ஆண்களை விட அன்பு, பண்பு மற்றும்‌ அறப்பணிகளில்‌ மிஞ்சும்‌ நிலையை அடைந்துள்ளதும்‌ அன்னை ஞானம்மாவின்‌ சமூக ஆன்மீகத்தின்‌ பயன்களே.

அன்னை ஞானம்மாவின்‌ சமூக ஆன்மீகம்‌ அவரை இறை நம்பிக்கை மிக்கவராக, ‘இறைவனால்‌ எல்லாம்‌ கூடும்‌’ என்ற உறுதிப்பாடு மிக்கவராக ஆக்கியது. மறை ஞானம்‌ முறைக்கல்வி) மற்றும்‌ ஸய்‌ ஞானம்‌ (உலகக்‌ கல்வி) இரண்டையும்‌ வழங்குவதன்‌ வழியாக பெண்மை மேன்மை காணும்‌ என்பதை ஞானக்‌ கண்கொண்டு பார்த்தார்‌. தனது தந்தையும்‌, தந்தையின்‌ தந்தையும்‌ கோவில்‌ பிள்ளைகளாக ஊட்டி வளர்த்த இறை நம்பிக்கை மறைக்கல்வியை வண்‌ குழந்தைகளுக்குப்‌ போதித்தார்‌. பெண்‌ குழந்தைகள்‌ கல்வி கற்க, தொடக்கப்‌ பள்ளியை நிறுவினார்‌. தனியாக இப்பணியைச்‌ செய்யமுடியாது என்பதால்‌, இறைப்பற்றுள்ள பெண்களைத்‌ தன்னுடன்‌ இணைத்துக்‌ கொண்டு மறைக்கல்வி மற்றும்‌ கல்விச்‌ செல்வத்தை வழங்கும்‌ அன்னை ஞானம்மா நல்லாசிரியராகத்‌ தீகழந்தார்‌.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்‌ எண்ணியவர்‌ தண்ணிய ராகப்‌ பெறின்‌”

என்பதை அன்னை தனது இறைப்பற்றுதியால்‌ நீரூபித்து காட்டினார்‌. பெண்‌ அகிம்சையின்‌ ஒரு திருவுருவம்‌. அகிம்சை என்றால்‌ பேரன்பு என்று பொருள்‌. பேரன்பு என்பது மற்றவர்கள்‌ துன்பத்தை உணர்ந்து, தனதாக்கிக்‌ கலைய முயல்வது. பெண்‌ மனிதனை ஈன்றெடுக்கும்‌ தாய்‌. அவரைத்‌ தவிர வேறு யாரால்‌ இப்பெரும்‌ தியாகத்தைச்‌ செய்ய முடியும்‌?” என்று நமது தேசத்தந்தை கேட்பதற்கு இணங்க, தென்‌ தமிழகத்துப்‌ பெண்களுக்குப்‌ பெண்ணிய விடுதலை, பெண்ணின்‌ மேன்மை போன்றவற்றுக்கு மட்டுமல்லாது, பெண்களின்‌ இறை நம்பிக்கை மற்றும்‌ திருச்சபையில்‌ அவர்களின்‌ பணிக்கும்‌ சிறந்த எடுத்துக்காட்டை இறைவன்‌ வழுங்க விரும்புகிறார்‌ என்பதன்‌ அடையாளமான முதல்‌ கொடையே இறை ஊழியர்‌ அன்னை ஞானம்மா.

இதுவே இவருக்கு இறைவன்‌ வழங்கியுள்ள இறை ஊழியர்‌ (Servant of God – 2014) நிலை எனலாம்‌.

QUICK LINKS

Home

About

Blog

Contact

CANONISATION

Process

Prayer

Testimonies

MEDIA

Photos

Videos

ardlogopng

© Archdiocese of Madras Mylapore. All rights reserved worldwide.